மனம்போல் மானிடர் வாழ்வு என்று பல வணக்கத்திற்கு உரியவர்கள் வாய்மொழிந்துள்ளனர். உற்று நோக்கும்பட்சத்தில் அவ்வாறுதான் நம் வாழ்வியல் நிகழ்வுகளும் அமைந்து விடுகின்றது. மனம்போல் வாழ்வு என்றால் வாழ்க்கையை ஒழுங்குபடுத்து வதைத் தவிர்த்து, மனதைதானே ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு மிக இணக்கமாக செயல்படுவது இந்த மலர் மருந்துகள் தான்.
கோபமோ, மகிழ்ச்சியோ, காமமோ எல்லாம் மனதின் பாலமான சுவாசத்தின் பயணத்தில் சீர்குலைதலை அளித்து, உணர்வில் மாறாட்டத்தை நிகழ்த்தி, வாழ்வில் பெரும் புயலை உருவாக்கி, உடல் மற்றும் மன நோயை தழுவ செய்கின்றது. இந்நிலையை மாற்றும் மகத்தான சக்தி மலர் மருந்தின் கைவசம் உள்ளது.
இந்தப் பயணத்தில் தனுசு இந்த ராசி காலபுருஷனுக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் பாவகத்தை தொடர்புகொள்வதனால், ஆன்மிகம், இறை சிந்தனை, பாக்கியம் போன்ற அனைத்தையும் தன்னகத்தில் பொதித்து வைத்துள்ளது.
இங்கு குரு ஆட்சியாகவும், ஆறாம் அதிபதியாக சுக்கிரனும், அஷ்டமாதிபதியாக சந்திரனும் அமைந்துள்ளனர். பேரற்புதம் கொண்ட தனுசு ராசியில் உச்சமோ அல்லது நீசமோ எந்த கிரகமும் பெறுவதில்லை.
இங்கு அமையப்பெற்றதன்மூலம், பூராடம், உத்திராடம், நட்சத்திரங்களின் கூட்டில் மலர் மருத்துவத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் மருந்துகளாக வைல்ட் ஓட் (WILDOAT)+வால்நட் (WALLNUT)+ஜென்டைன் (GENTAIN)+ராக் ரோஸ் ROCK ROSE)+லார்ஜ் (LARGE) எடுத்துக்கொள்வது சிறப்பு.
இது எதிர்கால ராசியாவதனால் கிளைமேட்ஸ் (CLEMATIS) சேர்த்துக் கொள்ளவேண்டும்.
சரண்னடைதல், கடவுள் அருள் போன்றவற்றின் தன்மைக்காக ஸ்வீட் ஜெஸ்நெட் (SWET CHESTNUT)இணைப்பது சிறப்பு.
19-ஆவது மருந்தாக லார்ஜ்(LARCH) அமைந்துள்ளது.
தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, தோல்வியினை எதிர்நோக்கும் பயம், பிறரை புகழ்ந்துகொண்டே இருப்பது, தீவிரமான ரசிகர்கள் மற்றும் அபிமானிகள், பின்னால் இருந்து அனைத்து காரியத்தையும் செய்யும் தன்மை, மற்றவர்களால் முடிந்தது என்னால் முடியாது என்று தாழ்வு மனப்பான்மை, எனக்கு திறமை போதாது என்கின்ற அவநம்பிக்கை போன்ற அனைத்து குணங்களையும் மேற்கூறிய இம்மருந்து சரிசெய்யும்.
இதனை உட்கொள்வத னால் தன்மீதும், தன் திறமையின்மீதும், அதீத நம்பிக்கை வளரும். தன்னை உணரும் ஞானம் கிடைக்கும். தான் புகழ்பாடும் நபரின்மூலமே பாராட்டு கிடைக்கும் அளவிற்கு தன்னை உயர்த்திக்கொள்ளும் சூழலை அமைத்துக் கொள்வார்கள்.
20-ஆவது மருந்தாக மிமுலஸ் (MIMULUS)அமைந்துள்ளது. இது எதற்கெடுத்தாலும் பயம்கொள்ளும் தன்மை, எதை பார்த்தாலும் பயந்து ஒதுங்கும் சூழல், காரணமே தெரியாத பயம், கரப்பான் பூச்சி, பல்லி போன்றவற்றிற்கும், கூட்டம் மற்றும் மேடை ஏறுவதனால் ஏற்படும் பயமும், சிறிய நோய் வந்தால்கூட தனக்கு ஏதோ ஒரு பெருநோய் வந்துவிட்டதாக மனக்கோட்டை கட்டிக்கொள்ளும் தன்மையும், கழிவறைக்குகூட தனியாக செல்ல பயப்படுவது, அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயம்.
பிறர்முன் பேசுவதற்கும், பழகுவதற்கும், கூச்சமும், பயமும் கொண்டவர்கள் இம்மருந்தை உட்கொள்ளும்பொழுது பயத்தால் உண்டாகும் அனைத்துவித நோய்களும் குணமாகும்.
எல்லா நேரத்திலும் தைரியமாகவும், தெம்புடனும், எதையும் அணுகும் சூழல் உருவாகும். எல்லா சூழலையும் சமாளிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
21-ஆவது மருந்தாக மஷ்டர்ட்((MUSTARD) அமைந்துள்ளது. காரணமே இல்லாமல் அளவுகடந்த சோகத்துடன் காணப்படுவது, தன்னை அறியாமல் அழுதுகொண்டே இருப்பது, ஆழ்மனதில் பதிந்துவிட்ட சம்பவங்களினால் பாதிப்படைவது, பரஸ்பர உறவு முறையில் விரிசல்களை ஏற்படுத்திக் கொள்வது, தீவிர நோய் தாக்கம் அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்புவரும் மனநிலை, பாலுணர்ச்சிக்கு அடிமையாகுதல் போன்ற குணத்தினை இம்மருந்து உட்கொள்வதன்மூலம் சரி செய்யமுடியும்.
இதனால் ரத்தம் சம்பந்தப்பட்ட உறவு முறைகளில் விரிசல்களை சரிசெய்யும் சூழலை உருவாக்கும் மனநிலை ஏற்படும்.
ஆத்ம தரிசனம் கிடைக்கும். தன் உள்ளும், புறமும், இறைநிலையின் உள்ளிருப்பை உணரமுடியும். பாலின கவர்ச்சியினால் வரும் பாதிப்புகள் நீங்கும்.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/13/malarmedicine-2025-08-13-15-50-02.jpg)